இரு பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த சோகம்; பொலிஸார் வெளியிட்ட சந்தேகம்.

இரு பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த சோகம்; பொலிஸார் வெளியிட்ட சந்தேகம்.

அனுராதபுரத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த சோகம்; பொலிஸார் வெளியிட்ட சந்தேகம் | Mother Of Two Suspect Released By The Police25 வயதுடைய தாரகி குணரட்ன அமரசேன என்ற பெண்ணே அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவன் தலைமறைவாகியுள்ளார் என்று தெரிவித்துள்ள பொலிஸார் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.