காலநிலை தொடர்பான அறிவிப்பு..!

காலநிலை தொடர்பான அறிவிப்பு..!

இன்றைய காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று (20.10.2023) பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும்.

காலநிலை தொடர்பான அறிவிப்பு | Weather Alert In Sri Lanka

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மி.மீ அளவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.