
பெண்கள் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் தப்பியோட்டம்..!
பாணந்துறை, வாலான பிரதேசத்தில் இயங்கி வரும் பெண்கள் இல்லத்தில் இருந்து இன்று பிற்பகல் மூன்று சிறுமிகள் தப்பிச் சென்றுள்ளதாக பாணந்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிறுவர் இல்லத்தின் பொறுப்பதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தப்பிச் சென்ற மூன்று சிறுமிகளும் 13, 14 மற்றும் 16 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் பேருவளை, பிபில மற்றும் ராகம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறுமிகள் இல்லத்தின் பொறுப்பதிகாரி அவர்கள் பயன்படுத்திய கையடக்க தொலைபேசிகளை கண்டெடுத்ததாகவும்,உரையாடிய பின்னர் கைத்தொலைபேசிகளை தரையில் வீசிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.