
கொலை செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயற்சித்தவருக்கு நேர்ந்த கதி.
வத்தளை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றிய 68 வயதுடைய ஹோட்டல் ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மற்றும் பேலியகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர்கள் மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை வெஹரஹேன பிரதேசத்தில் வசிக்கும் 68 வயதுடைய ஹோட்டல் ஊழியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் தெமட்டகொட மற்றும் கட்டுநாயக்க ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கொழும்பு 9 பிரதேசத்தில் வசிக்கும் 36 மற்றும் 44 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்குளி ரஜமல்வத்தை பிரதேசத்தில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற தகராறு காரணமாக கூரிய ஆயுதங்களால் தாக்கி நபர் ஒருவர் காயமடைந்தமைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டுபாய் நாட்டிற்கு தப்பிச் சென்ற நபரொருவரின் வழிகாட்டலின் பேரில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாலைதீவுக்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போது கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.