
ஆயுத பொருட்கள் உற்பத்தி செய்யும் நிலையம் முடக்கப்பட்டது..!
கேகாலை – ருவன்வெல்லையில் வீடொன்றில் இயங்கி வந்த, பாதாள உலகக் குழுவிற்கு சொந்தமான பாரிய ஆயுதக் களஞ்சியசாலை ஒன்று விசேட அதிரடிப்படையினரால் இன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியை சுற்றிவளைத்த பொலிஸ் குற்றச் செயல்களை விசாரிக்கும் பிரிவினர் அங்கிருந்த ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் பல ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
வீட்டில் இருந்த 5 துப்பாக்கிகள், பாதியளவில் தயாரிக்கப்பட்டிருந்த துப்பாக்கி பாகங்கள், தோட்டக்கள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இங்கு தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் நாட்டின் பல பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதாள உலகக்குழுவினரின் பயன்பாடுகளுக்காக இந்த துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.