பம்பலப்பிட்டியில் தொடருந்தில் மோதுண்டு இளைஞர் பலி.

பம்பலப்பிட்டியில் தொடருந்தில் மோதுண்டு இளைஞர் பலி.

பம்பலப்பிட்டி பகுதியில் தொடருந்தில் மோதுண்டு இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

தெஹிவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் மோதுண்டே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் தெஹிவளை, விஹாரை வீதியை சேர்ந்த 23 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பம்பலப்பிட்டியில் தொடருந்தில் மோதுண்டு இளைஞர் பலி | Train Accident In Bambalapitiyaகுறித்த இளைஞரின் மரணம் விபத்தா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.