இலங்கையில் புதிதாக 2000 கிராம உத்தியோகஸ்தர்கள் சேவை! வெளியான அறிவிப்பு

இலங்கையில் புதிதாக 2000 கிராம உத்தியோகஸ்தர்கள் சேவை! வெளியான அறிவிப்பு

இலங்கையில் புதிதாக 2000 கிராம உத்தியோகஸ்த்தர்களை சேவையில் சேர்ந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ப்ரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் புதிதாக 2000 கிராம உத்தியோகஸ்தர்கள் சேவை! வெளியான அறிவிப்பு | 2000 New Village Officers Service In Sri Lanka

குறித்த கிராம உத்தியோகஸ்த்தர்களுக்கான பரீட்சை பெறுபேறுகளானது பரீட்சைகள் திணைக்களத்தினால் அரச நிர்வாக அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நேர்முகப் பரீட்சைக்கு தகுதி பெற்ற 4000 பேரை அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ப்ரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புதிதாக 2000 கிராம உத்தியோகஸ்தர்கள் சேவை! வெளியான அறிவிப்பு | 2000 New Village Officers Service In Sri Lanka

மேலும், நீண்ட காலமாக கிராம உத்தியோகத்தர்கள், சேவையில் இணைத்துக்கொள்ளப்படாமையினால் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன.

சிலர் பணியாளர்கள் ஓய்வு பெற்றுள்ளமையினாலும் பல வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ப்ரதீப் யசரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.