இலங்கை தாதியர்களுக்கு வெளிநாடொன்றில் வேலைவாய்ப்பு: வெளியான முக்கிய தகவல்

இலங்கை தாதியர்களுக்கு வெளிநாடொன்றில் வேலைவாய்ப்பு: வெளியான முக்கிய தகவல்

சவுதி அரேபியாவில் இலங்கை தாதியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சவுதி அரேபிய சுகாதார அமைச்சுடன் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு கலந்துரையாடியதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஊடக செயலாளர் சஞ்ஜய் நல்லப்பெரும தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்த ஆண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை தாதியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தாதியர்களுக்கு வெளிநாடொன்றில் வேலைவாய்ப்பு: வெளியான முக்கிய தகவல் | Employment In Saudi For Sri Lankans

ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் முதற்கட்டம் கொழும்பில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 12 மாதங்களில் ஆயிரம் தாதியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.