டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்

நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (21.03.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் தொடர்ந்தம் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (21.03.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 308.80 ரூபாவாகவும், கொள்வனவு விலை 299.04 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 220.77 ரூபாவாகவும், கொள்வனவு விலை 230.62 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய் | Rupee Strengthen Against Usd Today Exchange Rate

பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 339.20 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 325.51ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 396.58 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 381.40 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.