பாடசாலைகளுக்கு அருகில் உள்ள உணவகங்களில் விசேட சோதனை..!

பாடசாலைகளுக்கு அருகில் உள்ள உணவகங்களில் விசேட சோதனை..!

களுத்துறை - அளுத்கம உள்ளிட்ட பல பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு அருகில் உள்ள உணவகங்கள் மற்றும் உணவு விற்பனை செய்யும் வாகனங்கள் விசேட சேதனைக்கு உற்படுத்தப்பட்டுள்ளன.

களுத்துறையிலிருந்து அளுத்கம வரையான பகுதியிலேயே இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

களுத்துறை , பேருவளை மற்றும் அளுத்கம உள்ளிட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் இருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் களுத்துறை தேசிய சுகாதார அறிவியல் நிறுவனம் மற்றும் பேருவளை பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.

இதன்போது, பொது சுகாதார ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தரமற்ற உணவுகளை விற்பனை செய்த 6 உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகளுக்கு அருகில் உள்ள உணவகங்களில் விசேட சோதனை | Special Check On Restaurants Near Schools

உணவு விற்பனை செய்யும் முச்சக்கரவண்டிகளிலும் விசேட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் முச்சக்கரவண்டிகளின் சாரதிகளின் உடல் நிலை குறித்தும் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த சோதனை நடவடிக்கைகளில், களுத்துறை தேசிய சுகாதார அறிவியல் நிறுவனம் மற்றும் பேருவளை பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தின் 50 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.