கொழும்பில் இரு பிள்ளைகளின் தாய்க்கு நடந்தது என்ன? பொலிஸார் குழப்பம்

கொழும்பில் இரு பிள்ளைகளின் தாய்க்கு நடந்தது என்ன? பொலிஸார் குழப்பம்

கொழும்பில் கடுவெல, கொத்தலாவல, பட்டியாவத்த வீதியிலுள்ள வீட்டில் இரத்தக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் அஜந்தா என்ற 51 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இரு பிள்ளைகளின் தாய்க்கு நடந்தது என்ன? பொலிஸார் குழப்பம் | Colombo Death What Happened To The Mother Of Two

அவரது கணவர், மகள் மற்றும் மகன் ஆகியோர் காலையில் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் பெண் தனியாக இருந்துள்ளார் . உயிரிழந்த பெண்ணும் கடுவெல நகரில் பணிபுரிந்து வருகின்றார்.

வழமையாக காலை 11.00 மணியளவில் வேலைக்கு செல்வதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பெண்ணின் தலையின் பின்புறத்தில் ஒரு பெரிய காயம் மற்றும் அவரது முகத்தில் கீறல்கள் இருந்தன.

அவர் அணிந்திருந்த தங்க ஆபரணமும் காணாமல் போனதையும், வீட்டில் எதையோ தேடியதற்கான தடயங்களும் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். இதனால், வீட்டில் திருடர்கள் நுழைந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.