வெளிநாடு சென்று நாடு திரும்பிய மருத்துவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி; இப்படியும் நடக்கிறது!

வெளிநாடு சென்று நாடு திரும்பிய மருத்துவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி; இப்படியும் நடக்கிறது!

கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெறுமதியான வீடுகளை மூடிவிட்டு, வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் வீடுகளுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்வது அல்லது வாடகைக்குக் கொடுக்கும் மோசடி நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மோசடியில் மருத்துவர் ஒருவர் சிக்கிய சம்பவம் அபலத்திற்கு வந்துள்ளது. பொரளை அல்விட்டிகல மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ரசாஞ்சலி ரத்நாயக்க என்ற வைத்தியர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் பணிக்கு சென்றுள்ளார்.

வெளிநாடு சென்று நாடு திரும்பிய மருத்துவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி; இப்படியும் நடக்கிறது! | Attention Go Abroad After Locking Their Housesஅங்கு பணி முடிந்து இலங்கை திரும்பிய போது வீட்டின் கதவுகளை உடைக்கப்பட்டு வேறு தம்பதிகளுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளமைகண்டு மருத்துவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் அவர் பொரளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.​​அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் ருவான் டி சொய்சா நேற்று -17- சட்டத்தரணி ஊடாக பொலிஸில் சரணடைந்துள்ளார்.

வெளிநாடு சென்று நாடு திரும்பிய மருத்துவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி; இப்படியும் நடக்கிறது! | Attention Go Abroad After Locking Their Houses

பொலிசில் சரணடைந்த சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ சில்வா தெரிவித்துள்ளார்.