வாகனங்களை வாங்குபவர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

வாகனங்களை வாங்குபவர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

வாகனங்களை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siambalapitiya) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், உரிய முறைகளின் ஊடாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது வாகனங்கள் கொள்வனவு செய்யும் தரப்பினரின் பொறுப்பாகும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 700 கோடி மதிப்பிலான 112 வாகனங்கள் மோசடி மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வாகனங்களை வாங்குபவர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை | Vehicles Import Restriction In Sri Lanka 2024

இந்த வாகனங்கள்  2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை பல்வேறு சட்டவிரோதமான முறைகள் மூலம் இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 

இவ்வாறான வாகனங்களை தற்போது பயன்படுத்துபவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட உள்ளது.

எனவே வாகனங்களை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறு அமைச்சர் சியம்பலாபிட்டிய பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.