அமைச்சர் மனுஷ வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்!

அமைச்சர் மனுஷ வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்!

நாட்டில் உழைக்கும் ஒவ்வொருவருக்கும் ஓய்வூதியம் அல்லது ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதற்கான பிரேரணை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனுஷ வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்! | Pension For All Working People In Sri Lanka

இதையடுத்தே தொழிலாளி என்ற பெயர் நீக்கப்பட்டு கௌரவமான வேலைக்கான உரிமையை பெற்றுக்கொடுக்கும் இதன்போது அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனுஷ வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்! | Pension For All Working People In Sri Lanka

எதிர்வரும் மே மாதத்தின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூர் மற்றும் தேசிய தலைவர்கள் உட்பட பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்தும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் உள்ள சந்தேகம் காரணமாக நேரடியாக ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய விரும்பாத போதிலும், பெரும்பான்மையான கட்சி உறுப்பினர்கள் ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.