க.பொ.த சாதாரண தரம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்த விசேட அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்த விசேட அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான தயார்படுத்தல் வகுப்புகள், கருத்தரங்குகள் இன்று (2024.04.30) நள்ளிரவுடன் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் முடியும் வரை (2024) பரீட்சைக்குத் தயார்படுத்தும் அனைத்துப் பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் தடை செய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

க.பொ.த சாதாரண தரம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்த விசேட அறிவிப்பு | Ban For G E D Ordinary Level Classes Department

இந்தத் தடை இன்று 30ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் மே 15 வரை அமுலில் இருக்கும்.

மேலும் இந்த உத்தரவை மீறும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.