நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரியற்ற வாகன இறக்குமதிக்கு ஒப்புதல்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரியற்ற வாகன இறக்குமதிக்கு ஒப்புதல்

அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரியற்ற வாகன அனுமதிப்பத்திரங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளமை குறித்து தமக்கு தெரியவந்ததுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெரும்பாலான மக்கள் வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ளனர். எனினும் அடுத்த வருடம் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என அரசாங்கம் கூறுகிறது.

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களின்; கோரிக்கையை ஏற்று அரசாங்கம் அவர்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்க தீர்மானித்துள்ளதாக வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரியற்ற வாகன இறக்குமதிக்கு ஒப்புதல் | Approval Of Duty Free Vehicle Import For Mpsமுன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரியற்ற வாகன கோரிக்கை சபாநாயகரிடம் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை அவர் ஜனாதிபதியின் அனுமதிக்காக அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரச ஊழியர்களின் சம்பளம் அடுத்த வருடம் அதிகரிக்கப்படும் என கூறியுள்ளார்.

எனினும் இந்த வாக்குறுதிகள் அனைத்தும் மக்களை ஏமாற்றுவதற்காகவே வழங்கப்படுவதாக சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.