பெண் ஒருவர் வெட்டி படுகொலை

பெண் ஒருவர் வெட்டி படுகொலை

சீதுவை லியனகேமுல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

காலி நெலுவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரிந்து வந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 06 வருடங்களாக  குறித்த பெண் வர்த்தக வலயத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் லியனகேமுல்ல பிரதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருந்துள்ளார்.

நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக்க சில்வா, சம்பவ இடத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.