இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிப்பு: வெளியான காரணம்

இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிப்பு: வெளியான காரணம்

குறைந்த விலையில் பொருட்களை இறக்குமதி செய்து அதிக விலைக்கு விற்க விலை நிர்ணயம் செய்யும் மாபெரும் மாபியா நாட்டில் இயங்கி வருவதாக வர்த்தக மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எஸ். வியாழேந்திரன் (S. Viyalendiran) தெரிவித்துள்ளார்.

அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும், அப்பணியில் ஈடுபடும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அதிக பொறுப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிப்பு: வெளியான காரணம் | Price Of Import Goods And Products

சுமார் 03 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுறவு வலையமைப்பின் ஊடாக பொருட்களை விநியோகிக்கும் போது நேரடியாக பொருட்களை இறக்குமதி செய்து குறைந்த விலையில் மக்களுக்கு விற்பனை செய்ய முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியங்கள் இருப்பதாகச் சுங்கத் திணைக்களத்தின் (Sri Lanka Customs) விடுவிப்பு அலுவலர்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிப்பு: வெளியான காரணம் | Price Of Import Goods And Products

சுங்கத் திணைக்களத்தைச் சேர்ந்த பணியாளர்கள் சுகவீனப் போராட்டம் காரணமாக துறைமுகங்களில் தேங்கிக்கிடந்த பொருட்களை மேற்பார்வை செய்து விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

அதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியங்கள் இருப்பதாகத் கூறப்படுகின்றது.