
அமெரிக்காவில் கின்னஸ் சாதனை படைத்த 99 வயது பாட்டி!
அமெரிக்காவில் 99 வயதுடைய பாட்டியொருவர் விமானத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ரோபினா ஆஸ்தி என்ற 99 வயதுடைய பாட்டி விமானம் ஓட்டுவது தொடர்பான பாடத்தை கற்பித்து, விமான ஓட்டிகளுக்கான பயிற்றுவிப்பாளராக தனது கடைசி அத்தியாயத்தை விமானத்தை இயக்கியும் முடித்துள்ளார்.
இதன் மூலம் உலகின் மிக வயதான விமான பயிற்றுவிப்பாளராகவும், விமானியாகவும் தனது நிலையை உறுதிப்படுத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு அமெரிக்காவின் அயோவா மாகாணத்தை சேர்ந்த 98 வயதான ஆணே உலகின் வயதான விமான பயிற்றுவிப்பாளர் மற்றும் விமானி என்ற சாதனையை வைத்திருந்தார் அதனை இவர் முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.