இடியுடன் கூடிய மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இடியுடன் கூடிய மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டின் அடுத்த சில நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (15.08.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

கிழக்கு மற்றும் ஊவா மற்றும் மாகாணங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! | Heavy Rain And Thunderstorms Expected In Provinces

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.