விவசாயிகளுக்கு இலவச உரம் : வெளியான மகிழ்ச்சி தகவல்

விவசாயிகளுக்கு இலவச உரம் : வெளியான மகிழ்ச்சி தகவல்

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் 55,000 மெற்றிக் தொன் அடிகட்டு பசளை உரம் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.உலக உணவுத் திட்டத்துடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது உர இருப்பு கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு இலவச உரம் : வெளியான மகிழ்ச்சி தகவல் | Ministry Of Agriculture Free Fertilizer Farmers

இதனடிப்படையில், எதிர்வரும் இரண்டு பயிர்ச்செய்கைக் காலங்களுக்குத் தேவையான அடிகட்டு பசளை உரங்கள் இந்தப் பருவத்திலிருந்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.