நாட்டில் குறித்த பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

நாட்டில் குறித்த பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

இலங்கையில் உள்ள பல பகுதிகளில் இன்றையதினம் (03-11-2024) மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் குறித்த பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! | Heavy Rain Is Likely In Many Parts Sri Lanka Todayஇதன்படி, மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.

நாட்டில் குறித்த பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! | Heavy Rain Is Likely In Many Parts Sri Lanka Todayஇந்நிலையில், மழையுடன் கூடிய மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளப் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.