60 இலங்கைத் தழிழர்களுக்கு பிரித்தானிய வழங்கியுள்ள அரிய வாய்ப்பு!

60 இலங்கைத் தழிழர்களுக்கு பிரித்தானிய வழங்கியுள்ள அரிய வாய்ப்பு!

பல ஆண்டுகளாக டியாகோ கார்சியா தீவில் சிக்கியுள்ள  இலங்கை ஏதிலிகள் அனைவரும் பிரித்தானியாவில் குடியேறுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,

60 இலங்கைத் தழிழர்களுக்கு பிரித்தானிய வழங்கியுள்ள அரிய வாய்ப்பு! | Opportunity 60 Sri Lankan Immigrants Settle In Ukடியாகோ கார்சியா தீவில் தங்கியிருந்த 60 இலங்கைத் தமிழர்கள் மூன்று ஆண்டுகளின் பின்னர் தற்போது பிரித்தானியாவில் தங்க அனுமதிக்கப்படவுள்ளனர்.

டியாகோ கார்சியா தீவில் இருந்து பிரித்தானியாவில் குடியேறுவதற்கு விண்ணப்பித்த முதல் குடிசனம், இலங்கைத் தமிழர்களாகக் கருதப்படுகின்றனர்.

அவர்களின் விண்ணப்பம் கடந்த காலங்களில் பல தடவைகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

60 இலங்கைத் தழிழர்களுக்கு பிரித்தானிய வழங்கியுள்ள அரிய வாய்ப்பு! | Opportunity 60 Sri Lankan Immigrants Settle In Uk இருப்பினும், தற்போது பிரித்தானிய அரசு தமது கொள்கையில் மாற்றம் செய்து, அவர்களை பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கத் தீர்மானித்திருப்பதாக அரசாங்க சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் கீழ் குற்றப்பின்னணிகள் எதுவும் இல்லாதவர்களின் குடும்பத்தினர் அனைவரும் நேரடியாக பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், இதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு எதிர்வரும் 2 நாட்களுள் வெளியாக்கப்படும் என்றும் அரசாங்க சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.