
தங்க விலையில் தொடரும் மாற்றம் : வெளியான முக்கிய தகவல்
கடந்த சில மாதங்களாக இலங்கையில் (sri Lanka) தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
அண்மையில் சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்க விலையானது நேற்று (18) அதிகரித்த நிலையில் இன்று (19) மீண்டும் அதிகரித்துள்ளது.
இன்றைய (19.11.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 765,343 ரூபாவாக காணப்படுகின்றது
24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,000 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 216,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இந்தத் தளம் Google AdSense தொடர்புடைய விளம்பர இணைப்புகளைப் பயன்படுத்துகிறது. AdSense தானாகவே இந்த இணைப்புகளை உருவாக்குகிறது. இவை கிரியேட்டர்கள் வருமானம் ஈட்டுவதற்கு உதவக்கூடும்.
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,750 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 198,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,630 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 189,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 210,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, அங்கு 22 கரட் தங்கப் பவுண் ஒன்று (22 karat gold 8 grams) 193,200 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.