கோர விபத்து : சம்பவ இடத்தில் காவல்துறை உத்தியோகத்தர் பலி

கோர விபத்து : சம்பவ இடத்தில் காவல்துறை உத்தியோகத்தர் பலி

ரன்னவிலவில் உள்ள படாத்த பண்ணைக்கு அருகில்  (11) இரவு 7 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹங்கம காவல்துறையினர் தெரிவித்தனர்.​

உயிரிழந்தவர் அம்பலாந்தோட்டை காவல்துறையில் இணைக்கப்பட்ட 54 வயதான காவல்துறை சார்ஜென்ட் அன்ட்ரஹென்னடிகே மஞ்சுள பிரியநாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அம்பலாந்தோட்டை நோனகம பகுதியைச் சேர்ந்தவர்.

காவல்துறை சார்ஜன்ட் தனது மோட்டார் சைக்கிளில் ரன்னவிலிருந்து ஹங்கம நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​ஹங்கமவிலிருந்து ரன்ன நோக்கிச் சென்ற ஒரு கெப் ரக வாகனத்துடன் மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கெப் சாரதி வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த காவல்துறை சார்ஜன்டின் உடல் ரன்னா கிராமப்புற மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கெப் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இன்று இரவு கோர விபத்து : சம்பவ இடத்தில் காவல்துறை உத்தியோகத்தர் பலி | Police Sergeant Dies In Motorcycle Accidentவிபத்து குறித்து ஹங்கமபோக்குவரத்து பிரிவு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.