வாக்காளர்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்க முடியும்- மஹிந்த தேசப்பிரிய

வாக்காளர்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்க முடியும்- மஹிந்த தேசப்பிரிய

வாக்களிப்பு நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதன் காரணமாக எவ்வித சந்தேகமும் இன்றி பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பம்பலபிடிய-லின்சி மகளிர் கல்லூரியில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.