டோர்ச் அடித்தவருக்கு கத்திக்குத்து: சந்தேக நபர் மாயம்

டோர்ச் அடித்தவருக்கு கத்திக்குத்து: சந்தேக நபர் மாயம்

மாணிக்கக்கல் தோண்டும் இடத்தை நோக்கி டோர்ச் ஒளியை ஒளிரச் செய்தார் என சந்தேகப்பட்டு, ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் பொகவந்தலாவையில் இடம்பெற்றுள்ளது.

வெட்டப்பட்ட நபர் அனுமதியின்றி மாணிக்கக்கல் தோண்டும் இடத்தை நோக்கியே  மின்விளக்கை ஒளிரச் செய்துள்ளதாகவும் இதன் காரணமாகவே அவரை கத்தியால் குத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

டோர்ச் அடித்தவருக்கு கத்திக்குத்து: சந்தேக நபர் மாயம் | Torch Wielding Man Stabbed Suspect Missingகத்தியால் குத்தி காயப்படுத்திய சந்தேக நபரை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தெரிவித்துள்ளார்.

கெசல்கமுவ ஓயா வனப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபடும் போது, அந்த திசையில் டோர்ச் ஒளியை ஒருவர் ஒளிரச் செய்ததற்காக கோபமடைந்த சந்தேகநபர், பொகவந்தலாவை நகர மத்தியில் வைத்து, குறித்த நபரை, நேற்று கத்தியால் குத்தி காயப்படுத்திவிட்டு, அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த நபர் பலத்த காயங்களுடன் டிக்கோயா-கிளங்கன் ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், பொகவந்தலாவை பொலிஸார் தாக்குதல் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.