
தென்னிலங்கையில் அரச அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு
தெஹிவளை (Dehiwala), எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மைதானத்திற்கு அருகில் தெஹிவளை - கல்கிஸ்ஸ நகரசபையின் சுகாதார மேற்பார்வையாளர் மீது துப்பாக்கிச் சூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்றைய தினம் (24.07.2025) இடம்பெற்றுள்ளது.
எனினும், அந்த துப்பாக்கிச் சூட்டு முயற்சி தோல்வியடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு தாக்குதல்காரர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளதாகவும், காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.