
உயரும் வெப்பநிலை! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
வெப்பநிலை எச்சரிக்கை நிலைக்கு உயரும் இலங்கையில் இன்றும் சில பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை நிலை வரை உயரும் என்று வளிமண்டலவியம் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன்படி வடக்கு, கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும்;, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று அதிக வெப்பம் நிலவும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பொதுமக்கள் வெளிப்புறங்களில் கடுமையான செயல்பாடுகளை மட்டுப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.
அத்துடன் வெளிர் நிற, தளர்வான ஆடைகளை அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.