 
                            குடும்பஸ்தரின் உயிரை பறித்த பணிஸ் ; பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
பணிஸ் துண்டு தொண்டையில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஹோமாகம, பிட்டிபன பகுதியை சேர்ந்த 72 வயதான ஓய்வுபெற்ற நகர சபை சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த முதியவர் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பணிஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது துரதிர்ஷ்டவசமாக அது அவரது தொண்டையில் சிக்கிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், குடும்பத்தினர் அம்புலன்ஸை அழைத்து அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் சாப்பிட்ட பணிஸின் ஒரு துண்டு நுரையீரலுக்குள் சென்று சிக்கியதால் ஏற்பட்ட சுவாசக் கோளாறே மரணத்திற்கு காரணம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
 
                     
                                            