யாழில் கோரவிபத்து; பெண் உயிரிழப்பு

யாழில் கோரவிபத்து; பெண் உயிரிழப்பு

  யாழ். தென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்தில் இன்று (12) விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் ஏ9 வீதியில் எழுதுமட்டுவாள் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

யாழில் கோரவிபத்து; பெண் உயிரிழப்பு | Bus And Motor Bike Fatal Accident In Jaffna

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்து பயணித்துக்கொண்டிருந்த வேளை எழுதுமட்டுவாள் பகுதியில் ஏ9 வீதியில் ஏற முற்பட்ட உந்துருளியுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழில் கோரவிபத்து; பெண் உயிரிழப்பு | Bus And Motor Bike Fatal Accident In Jaffna

இந்த விபத்துச் சம்பவத்தில் எழுதுமட்டுவாள் தெற்கு பகுதியைச் சேர்ந்த 55 வயது பெண் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான உந்துருளியும் பலத்த சேதமடைந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் கோரவிபத்து; பெண் உயிரிழப்பு | Bus And Motor Bike Fatal Accident In Jaffna

திருகோணமலையிலிருந்து, யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பேருந்துடன், எழுதுமட்டுவாள் பகுதியிலிருந்து வந்த உந்துருளி மோதிய விபத்தில் படுகாயமடைந்த பெண் உயிரிழந்ததாக கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்