கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

குழு ஒன்றின் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சீதுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் சீதுவ - ஈரியகஹலிந்த வீதி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சீதுவ, ஈரியகஹலிந்த வீதி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டத்தில் பலத்த காயமடைந்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை | Man Stabbed To Death In Seethuv

சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

மேலும், சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கையை சீதுவ காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்