கொத்து ரொட்டி, முட்டை அப்பம் விலை அதிகரிப்பு; நுகர்வோர் கவலை

கொத்து ரொட்டி, முட்டை அப்பம் விலை அதிகரிப்பு; நுகர்வோர் கவலை

 நாட்டில் முட்டை மற்றும் பிற மூலப்பொருட்களின் விலை குறைந்திருந்தாலும், கொத்து ரொட்டி, முட்டை அப்பம் மற்றும் முட்டை சார்ந்து உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஒரு முட்டையின் விலை ரூபாய் 29 ரூபாய் முதல் 33 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

கொத்து ரொட்டி, முட்டை அப்பம் விலை அதிகரிப்பு; நுகர்வோர் கவலை | Egg Kothu And Egg Appam Price Increase Srilanka

இந்த நிலையில், பல்வேறு உணவகங்களில் கொத்து ரொட்டியின் விலை மிக அதிகமாக இருப்பதாகவும், முட்டை அப்பம் மற்றும் முட்டை ரொட்டியின் விலையும் அதிகமாக உள்ளதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உடனடியாக நுகர்வோர் அதிகார சபை தலையிட்டு மக்களுக்கு சலுகைத் திட்டங்களை வகுக்க வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.