இலங்கையில் பெண் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள்; மகிழ்ச்சியை ஏற்படுத்திய தகவல்

இலங்கையில் பெண் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள்; மகிழ்ச்சியை ஏற்படுத்திய தகவல்

இலங்கை போக்குவரத்து சபைக்கு பெண் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக  போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் பெண் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள்; மகிழ்ச்சியை ஏற்படுத்திய தகவல் | Female Drivers And Conductors In Sri Lanka Ctb Bus

இலங்கை போக்குவரத்து சபையின் 25 டிப்போக்களை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதற்காக 750 புதிய சாரதிகளையும், நடத்துநர்களையும் ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை போக்குவரத்து சபை மீண்டும் கட்டமைக்கப்பட்டு இலாபகரமான நிறுவனமாக மாற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.