விபத்தில் சிக்கி மூன்று மாத குழந்தை பரிதாபமாக பலி

விபத்தில் சிக்கி மூன்று மாத குழந்தை பரிதாபமாக பலி

வாகன விபத்தில் மூன்று மாத குழந்தையொன்று பலியானதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் பேலியகொடை பகுதியில் நேற்று (16) இடம்பெற்றுள்ளது.

களனி, பட்டிய சந்தியைச் சேர்ந்த 3 மாதங்களும் 23 நாட்களுமேயான பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி, பேலியகொட - ரோஹண விஹாரைக்கு அருகில் பாதசாரிகள் கடவைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த உந்துருளி மற்றும் சிற்றூந்தின் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் சிக்கி மூன்று மாத குழந்தை பரிதாபமாக பலி | Three Month Old Baby Dies In Road Accident

இந்த சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த குழந்தை, குழந்தையின் தாய், முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த ஒருவரும் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தாயுடன் பயணித்த குழந்தை காயமடைந்த நிலையில் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. குழந்தையின் உடலம் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பேலியகொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.