இலங்கையில் ஓகஸ்ட் மாதத்தில் அதிகரித்த வாகனப் பதிவு

இலங்கையில் ஓகஸ்ட் மாதத்தில் அதிகரித்த வாகனப் பதிவு

இலங்கையில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 38,240 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) தரவுகள் குறிப்பிடுகின்றன.

கடந்த ஜூலை மாதத்தில் 35,232 வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையில், முச்சக்கர வண்டிகள், உந்துருளிகள் மற்றும் SUV ரக வாகனங்களின் விற்பனையில் ஏற்பட்ட அதிகரிப்பால் ஓகஸ்ட் மாதத்தில் முந்தைய மாதத்தை காட்டிலும் வாகன பதிவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் 454 முச்சக்கரவண்டிகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், ​ஓகஸ்ட் மாதத்தில் முச்சக்கர வண்டி பதிவுகள் 2,497 ஆக அதிகரித்துள்ளன.

அதேநேரம், ஜூலை மாதத்தில் 26,171 உந்துருளிகள் பதிவாகியிருந்ததுடன், ஓகஸ்ட் மாதத்தில் 27,585 உந்துருளிகள் பதிவாகியுள்ளன.

எனினும், ஜூலை மாதத்தில் சிற்றூந்துகளின் பதிவுகள் 2,748 அலகுகளிலிருந்து ஓகஸ்ட் மாதத்தில் 2,329 அலகுகளாக குறைந்துள்ள இதேவேளை, புத்தம் புதிய மகிழுந்துகளில் BYD ரக மின்சார வாகனங்களின் பதிவுகள் அதிகரித்துள்ளது.

இலங்கையில் ஓகஸ்ட் மாதத்தில் அதிகரித்த வாகனப் பதிவு | 38240 Vehicles Registered In Sri Lanka In August

அந்தவகையில் கடந்த ஜூலையில் 244 BYD ரக மின்சார வாகனங்களும் ஓகஸ்ட் மாதத்தில் 354 வாகனங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

ஜூலை மாதத்தில் 3,299 அலகுகளாக இருந்த SUV ரக வாகனங்களின் பதிவுகள் ஓகஸ்ட் மாதத்தில் 3,808 அலகுகளாக கடுமையாக உயர்ந்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.