அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து வெளியான தகவல்

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து வெளியான தகவல்

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் அரச துறை பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் வேதன மட்டம் குறைவாகவும் உள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் கெவோர்க் சாக்ஸியன் தலைமையிலான குழுவினர் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட குழு உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் அரச துறையிலுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை சீர் செய்து மொத்த உற்பத்தி திறனை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. 

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து வெளியான தகவல் | Government Employees Salary Increase

பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை அதிக மின்சார செலவுகளை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் வலுசக்தி துறையில் உடனடியாக மறுசீரமைப்புகள் அவசியம் என்றும் உலக வங்கி வலியுறுத்தியுள்ளது.