வியக்க வைக்கும் தாயின் பாசம் ; மகனுக்கு புதிய வாழ்வு கொடுத்த தாய்

வியக்க வைக்கும் தாயின் பாசம் ; மகனுக்கு புதிய வாழ்வு கொடுத்த தாய்

சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மகனுக்கு 72 வயது தாயொருவர் தனது சிறுநீரகத்தை வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 72 வயதான மூத்த பெண்மணி ஒருவர் அவரது 46 வயதான மகனுக்கு சிறுநீரகத்தை வழங்கியுள்ளார்.

வியக்க வைக்கும் தாயின் பாசம் ; மகனுக்கு புதிய வாழ்வு கொடுத்த தாய் | A Mother S Amazing Loveசிறுநீரக செயலிழப்பு காரணமாக பாதிக்கப்பட்ட குறித்த ஆண் கடந்த இரு வருடங்களாக கூழ்மப்பிரிப்பு (dialysis) சிகிச்சையைப் பெற்று வந்துள்ளார்.

எனினும் உடல் நலனில் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுநீரகத்தை நன்கொடையாக வழங்க அவரது தாயார் முன்வந்துள்ளார்.

தற்போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன