யாழில் அதிரடியாக கைதாகும் திடீர் பணக்காரர்கள்...! சொத்துக்கள் முடக்கம்: தீவிரமடையும் விசாரணை

யாழில் அதிரடியாக கைதாகும் திடீர் பணக்காரர்கள்...! சொத்துக்கள் முடக்கம்: தீவிரமடையும் விசாரணை

வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பவற்றில் ஈடுபட்டு, சட்டவிரோதமாகவும் முறைகேடாகவும் சொத்துச் சேர்த்த சந்தேகத்தில் 11 பேருக்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

குறித்த விடயத்தை யாழ்ப்பாணம் (Jaffna) பிராந்திய சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜே.பி.எஸ்.ஜெயமஹா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, போதைப்பொருள் கடத்தல், வன்முறைகள், வட்டிக்கு விடுதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுச் சொத்துச் சேர்த்தவர்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் அண்மைக்காலமாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

யாழில் அதிரடியாக கைதாகும் திடீர் பணக்காரர்கள்...! சொத்துக்கள் முடக்கம்: தீவிரமடையும் விசாரணை | Search Operation In Jaffna District Many Arrested

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை 11 பேர் இந்த விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களுக்குச் சொந்தமான சொகுசுக் கார்கள், ஆடம்பர விடுதிகள், இறால் பண்ணைகள், உள்ளூரிலும் வெளிமாவட்டங்களிலும் பல்பொருள் அடங்காடிகள் என்பன உள்ளன. 

அந்தச் சொத்துக்கள் தொடர்பில் முழுமையான புலன் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அவை சட்டவிரோதமாகப் பெறப்பட்டவை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அந்தச் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும் என்றார்.