நவம்பர் 1 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள புதிய திட்டம்

நவம்பர் 1 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள புதிய திட்டம்

முச்சக்கர வாகனங்கள், பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் பிற வாடகை வாகன நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையகம் அறிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபாலா இந்த நடவடிக்கையை அறிவித்தார்.

இந்த திட்டத்தின் முதல் கட்டம், போக்குவரத்து சேவைகள் தொடர்பான தரவு சேகரிப்பை உள்ளடக்கும் என்றும், இந்த திட்டம் நவம்பர் 1 ஆம் திகதி தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நவம்பர் 1 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள புதிய திட்டம் | School Office Transport Rules

இதற்கிடையில், முச்சக்கர வண்டிகள், பாடசாலை மற்றும் அலுவலக போக்குவரத்து சேவைகள், வாடகை வாகனங்கள் மற்றும் சிறப்பு சுற்றுலா சேவைகள் பற்றிய தரவுகளும் சேகரிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணையகத்தின் பண்ணிப்பாளர் நிலன் மிராண்டா தெரிவித்தார்.