தென்னந்தோப்பில் சிதைவடைந்த நிலையில் இளைஞன் சடலம்; கொலையா?

தென்னந்தோப்பில் சிதைவடைந்த நிலையில் இளைஞன் சடலம்; கொலையா?

 அம்பாந்தோட்டையில் பெலியத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகுலுகமுவ, தெத்துவாவெல பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்பில் நேற்று (30) காலை சிதைவடைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பெலியத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

பெலியத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தென்னந்தோப்பில் சிதைவடைந்த நிலையில் இளைஞன் சடலம்; கொலையா? | Young Man Found Decomposed In Coconut Grove

இளைஞன் கடந்த 19 ஆம் திகதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் 11 நாட்களாக வீடு திரும்பாமல் இருப்பதாக பெலியத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தென்னந்தோப்பு உரிமையாளர் சடலத்தை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மோட்டார் சைக்கிள் நாகுலுகமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இளைஞனின் மரணம் கொலையாஅல்லது தற்கொலையா  என   பெலியத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.