கள்ளக்காதலனுடன் சேர்ந்து 25 வயது மகனை திட்டமிட்டு கொன்ற தாய்
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் தேஹட் மாவட்டம், அங்கத்பூர் பகுதியில் தாய் கள்ளக்காதலனும் சேர்ந்து மகனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அவர் மயங்க் என்ற நபருடன் பழக்கம் வைத்து வந்ததாகவும், அது பின்னர் கள்ளக்காதலாக மாறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மம்தாவின் மகன் பிரதீப் சிங் (25) தன் தாயின் உறவை எதிர்த்து வந்ததால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது மகனின் பெயரில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு இன்சூரன்ஸ் பாலிசிகளை எடுத்திருந்த மம்தா சிங், காப்பீட்டு பணத்தைப் பெறவும், காதல் வாழ்க்கையையும் தொடரவும் மகனை கொலை செய்ய தீர்மானித்தார்.
இதற்காக மம்தா தனது காதலன் மயங்க் மற்றும் அவரது சகோதரர் ரிஷி ஆகியோருடன் இணைந்து திட்டமிட்டார்.
சம்பவத்தன்று பிரதீப்பை வீட்டிற்கு இரவு உணவிற்கு வருமாறு அழைத்த மம்தா, வழியில் மயங்க் மற்றும் ரிஷி இருவரும் சுத்தியலால் தாக்கி கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் உடலை நெடுஞ்சாலை அருகே வீசி விபத்து போல் காட்ட முயன்றனர்.
ஆனால் பிரேத பரிசோதனையில் பிரதீப் அடித்துக் கொல்லப்பட்டதை பொலிசார் உறுதி செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் மயங்க் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து கிடைத்த தகவலின் பேரில், கொலை திட்டத்தை மம்தா சிங்கே தீட்டியதாகவும், சம்பவத்தின்போது அவர் அங்கிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், ரிஷி பொலிசாரிடம் இருந்து தப்பியோட முயன்றபோது, பொலிசார் அவரது காலில் சுட்டு மடக்கிப் பிடித்தனர்.
முக்கிய குற்றவாளி மம்தா சிங் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க பொலிசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.