டிராக்டருடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; இளைஞன் பலி ; குழந்தை படுகாயம்
தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலாவ 419 கிராம வீதியில் நேற்றையதினம் இரவு, இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர் திசையில் இருந்து வந்த டிராக்டருடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், டிராக்டரில் பயணித்த ஒருவர் மற்றும் ஒரு குழந்தை காயமடைந்தனர்.
இதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தலாவ, ஹிங்குருவெவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.