கிழக்கில் டொல்பின் ...வடக்கில் ஆமை; உயிரிழந்து கரையொதுங்கும் கடல்வாழ் உயிரிழங்கள்!

கிழக்கில் டொல்பின் ...வடக்கில் ஆமை; உயிரிழந்து கரையொதுங்கும் கடல்வாழ் உயிரிழங்கள்!

  வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. அந்தவகையில் செவ்வாய்க்கிழமை (06) ஆமையின் இறந்த உடல்கள் கரையொதுங்கிய உள்ளன.

கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரை ஒதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கிழக்கில் டொல்பின் ...வடக்கில் ஆமை; உயிரிழந்து கரையொதுங்கும் கடல்வாழ் உயிரிழங்கள்! | Marine Animals Are Dying And Washing Ashore Lanka

ஆமைகளை பிடிப்பதும், இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதம் என்பதால் கரையொதுங்கிய ஆமைகள் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையிலும் உருக்குலைந்து காணப்படுகின்றது.  

 அதேவேளை திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சல்லி கடற்கரையில் இறந்த நிலையில் டொல்பின் ஒன்று செவ்வாய்க்கிழமை (6) காலை கரையொதுங்கியுள்ளது.

இந்த டொல்பின் சுமார் 5 அடி நீளம் கொண்டதாகவும் சிறியதாகவும் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

GalleryGalleryGalleryGallery