கடும் மழையால் நீரில் மூழ்கியுள்ள காலி நகரின் பல வீதிகள்

கடும் மழையால் நீரில் மூழ்கியுள்ள காலி நகரின் பல வீதிகள்

காலி பிரதேசத்தில் இன்று (06) பெய்த மழை காரணமாக நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காலி - வக்வெல்ல வீதி, காலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடும் மழையால் நீரில் மூழ்கியுள்ள காலி நகரின் பல வீதிகள் | Many Streets In Galle City Are Submerged Rains

இதேவேளை, காலி - வக்வெல்ல வீதியூடான போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காலி பிரதேசத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் மக்கள் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.