தமிழர் பகுதியில் பெரும் துயரை ஏற்படுத்திய சிறுமியின் மரணம் ; பொலிஸாரின் பிடியில் ஒருவர்
பிங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிலாபம் - குருநாகல் வீதியில் மேல் கொஸ்வத்த பகுதியில், இடம்பெற்ற வாகனவிபத்தில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
வீதியோரத்தில் நடந்து சென்ற இரண்டு சிறுவர்கள் மீது சிலாபம் நோக்கிப் பயணித்த லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த இரண்டு சிறுவர்களும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹல்மில்லேவ பகுதியை சேர்ந்த 13 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.