இ.போ.ச பேருந்தில் மதுபோதையில் எல்லைமீறிய யாழ் இளைஞனுக்கு இறுதியில் நேர்ந்த நிலை

இ.போ.ச பேருந்தில் மதுபோதையில் எல்லைமீறிய யாழ் இளைஞனுக்கு இறுதியில் நேர்ந்த நிலை

 யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தின் நடத்துனரை மதுபோதையில் தாக்கிய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தில் , நிறை போதையில் மிதிபலகையில் நின்று பயணித்தவரை நடத்துனர் பேருந்தில் இருந்து இறங்குமாறு கூறியுள்ளார்.

இ.போ.ச பேருந்தில் மதுபோதையில் எல்லைமீறிய யாழ் இளைஞனுக்கு இறுதியில் நேர்ந்த நிலை | Attack On E P S Bus Driver

அதனால் நடத்துனரும் , மதுபோதையில் இருந்த இளைஞனுக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது, இதன்போது இளைஞன் நடத்துனரை தாக்கியுள்ளார்.

அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் இளைஞனை மடக்கி பிடித்து, யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் இளைஞனை கைது செய்துள்ளனர்.