இரண்டாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது

இரண்டாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜமைக்காவின் சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் பெய்த பலத்த மழை காரணமாகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


இப்போட்டியில் நாணய சுழற்சி மட்டுமே நடத்த முடிந்ததோடு, அதில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்திருந்தது.


எனினும், மைதானத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள நேரப்படி மாலை 06:35 மணியளவில் போட்டியை முற்றிலுமாக கைவிடுவதற்கு நடுவர்கள் தீர்மானித்தனர்.


இதன்படி, மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் தொடர்ந்து முன்னிலையில் வகிக்கிறது.


இரு நாடுகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நாளை மறுதினம் (09) நடைபெறவுள்ளது.