பெண்களை டிஸ்டர்ப் பண்ணினா... கடும் எச்சரிக்கை விடுத்த முதல்வர் விஜய்
நிரபராதிகள் யாரும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
பெண்களைப் பற்றிய செய்திகளை கேள்விப்படும் போதெல்லாம் பதறுது.
இந்தப் பிரச்சனைகள் எல்லாம் ஏன் நடக்குது என ஆராயும்போது ஒரே இடத்தில் வந்து நிக்குது.
போதைப்பொருள் கலாச்சாரம். இன்னைக்கு இந்தப் பிரச்சனை புதுசா கிளம்பி வரல. காலம் காலமா நடக்குது. அதை கண்டுக்காம விட்டதுதான் காரணம்
பெண்களை டிஸ்டர்ப் பண்ணிட்டு தப்பிச்சு போயிடலாம்னு நினைக்கிறவங்களுக்கு நான் எச்சரிக்கை கொடுக்கிறேன்.
பெண்களை யாரும் டிஸ்டர்ப் பண்ணினா நடவடிக்கை ரொம்ப கடுமையா ஃபாஸ்டா இருக்கும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு ரொம்ப வேகமாக, ரொம்ப கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனால் அதில் நிரபராதிகள் யாரும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்றும் காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன்.
பெண்கள் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்டது மட்டுமன்றி, சமூக மற்றும் தனி மனித ஒழுக்கமும் சம்பந்தப்பட்டது என தெரிவித்தார்.