அஸ்வெசும பயனாளிகளுக்கு நற்செய்தி! வைப்பிலிடப்படவுள்ள பணம்

அஸ்வெசும பயனாளிகளுக்கு நற்செய்தி! வைப்பிலிடப்படவுள்ள பணம்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள பயாளிகளுக்கான ஜூன் மாதத்திற்கான கொடுப்பனவுகளை நாளை (18) வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 1,373,248 பயனாளி குடும்பங்களுக்காக 10,904,801,250.00 ரூபா நாளை சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வைப்பிலிடப்படவுள்ளது.

 

அஸ்வெசும வங்கி கணக்கு

இதுதொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர், இந்த கொடுப்பனவுகள் அஸ்வெசும முதற்கட்ட பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட பயனாளிகள் நாளை முதல் தங்களது அஸ்வெசும வங்கி கணக்குகளின் ஊடாக இந்த பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது